கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஆலயம் அருகே சிவாச்சாரியார்கள் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் சிவாச்சாரியார் மேல தாளங்கள் முழங்க கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்திருந்தது.

கலசத்திற்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்பு.

கரூர், மட்டுமின்றி அண்டை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.