முகப்பு Uncategorized கரூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமான மழை பெய்தும் நிரம்பாத குளங்கள்.

கரூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமான மழை பெய்தும் நிரம்பாத குளங்கள்.

1
0

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை மற்றும் கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த போதிலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்கள் ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. இயற்கையின் வரப் பிரசாதமாக தற்போது காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நடப்பாண்டில் இதுவரை 200 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இன்னும் சுமார் மூன்று மாதங்கள் பருவமழை பெய்ய இருப்பதால், இன்னும் ஏராளமான உபரி மழையின் நீர் கடலில் வீணாக கலக்கும். இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும் இலட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனை ஒன்றிய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் ஆன வெள்ளியணை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, பெரிய தாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு குளமும் சுமார் 300 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நான்கு குளங்களிலும் தூர்வாரினால் தெற்கு பகுதிகளிலும் தாந்தோணி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய பகுதியில் பெருவாரியான மானாவாரி தரிசு நிலங்கள் ஐம்பதாயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெறுவதுடன், லட்சக்கணக்கான விவசாயிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவதுடன் தலா வருமானம், நாட்டு வருமானம் உயர காரணமாக அமையும். மேலும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன், சமூகத்தில் நடைபெறக்கூடிய குற்றச் சம்பவங்கள் தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்