முகப்பு Uncategorized கரூர் மாவட்டத்தில் சமணர் படுக்கையா!!

கரூர் மாவட்டத்தில் சமணர் படுக்கையா!!

1
0

வேலாயுதம்பாளையம் புகழி மலையில் தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 1,2 மற்றும் 3 நூற்றாண்டுக்கு சமணர் படுக்கை மற்றும் கல்வெட்டுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து சிறப்பாக பராமரித்து, வருங்கால சமுதாயத்திற்கு கடந்த கால வரலாற்றினை தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து, தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழகுடியினர் நலத்துறையின் கல்லூரி பெண்கள் விடுதி ஆய்வு மேற்கொண்டு, கழிவறை படுக்கை மற்றும் சுற்றங்களை பார்வையிட்டு மாணவிகளிடம் விடுதிகளின் செயல்பாடுகள், உணவின் தரம் போன்றவை குறித்தும் கேட்டறிந்தனர்.

விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறைஅலுவலர்கள் நிவர்த்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு திட்டங்கள் சாராத செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களான நிமிர்ந்து நில், துணிந்து செல், இளந்தளிர் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு, தங்க தந்தை திட்டம், விடியல் வீடு, பாலம், கலங்கரை விளக்கம், பொக்கிஷம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்