முகப்பு Uncategorized கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அதிகாலை வரை விடிய விடிய மழை

கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அதிகாலை வரை விடிய விடிய மழை

6
0

கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பஞ்ச பட்டியல் 120 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. வட தமிழகத்தின் மேல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 14 வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு 10:30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. கரூர் நகரில் பெய்த மழை காரணமாக சின்ன குளத்துப்பாளையம், பசுபதிபாளையம், ரயில்வே குகை வழி பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதி பட்டனர். காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.,): கரூர், 2.4, அரவக்குறிச்சி, 7.0, அணைப்பாளையம், 0.0, க.பரமத்தி, 0, குளித்தலை, 0, தோகைமலை, 0, கிருஷ்ணராயபுரம், 13, மாயனூர், 0, பஞ்சப்பட்டி, 37, கடவூர், 6, பாலவிடுதி, 9.4, மைலம்பட்டி, 14 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 6.40 மி.மீ., மழை பதிவானது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்