முகப்பு Uncategorized கரூர் மாவட்டத்தில் 3000 முதல் 4000 குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்-அதிர்ச்சித் தகவல்

கரூர் மாவட்டத்தில் 3000 முதல் 4000 குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்-அதிர்ச்சித் தகவல்

19
0

ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தி மாற்றுத்திறனாளிகளாக மாறாமல் இருக்க அரசு மருத்துவமனைகளில் செயல்முறை பயிற்சியாளர்களை அதிகளவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூரில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கற்றல் குறைபாடு (ஆட்டிசம்) உள்ள குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்த உளவியல் வல்லுனர்கள் ஆலோசனை அவசியம். இந்த முகாமில் ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில் பார்வை, செவித்திறன், கை, கால் இயக்கம், அறிவுத்திறன் வளர்ச்சி, ஆட்டிசம் உள்பட 26 வகை குறைபாடுகள் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 3000 முதல் 4000 குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். தற்போது 160 குழந்தைகளுக்கு 1 குழந்தை ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகளாக பிறக்கின்றனர். இத்தகைய குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே முறையான பயிற்சி வழங்குவதன் மூலம் ஆட்டிஸம் பாதிப்பில் இருந்து மீட்பதுடன், அவர்கள் மாற்றுத்திறனாளிகளாக மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தனியார் பயிற்சி மையங்களில் ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை அனுப்பி அவர்களை முறையாக பராமரிக்க முடியாத சூழ்நிலை சராசரி பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது. இத்தகைய மையங்களில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதால் சராசரி பெற்றோர்கள் ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதை கவனத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய துறை சார்ந்த வல்லுநர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று செயல்முறை பயிற்சியாளர் மருத்துவர் ஜெகதீசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்