முகப்பு கரூர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை தோகைமலை...

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை தோகைமலை போலீசார் கைது.

2
0

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திவந்தது தெரியவந்தது.

அதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தோகைமலையை சேர்ந்த செல்வம் (40), மகேஸ்வரன் (34), தினேஷ் (26), ராக்கம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (52), சங்காயிபட்டியை சேர்ந்த சரவணன் (40), விஜயன் (36), பழனிச்சாமி (42), நாடக்காப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (35), உப்பிலியப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (33), வடிவேல் (45), கன்னிமார்பாளையத்தை சேர்ந்த குமரேசன் (30) ஆகிய 11 பேரை பிடித்த தனிப்படை போலீசார் தோகைமலை காவல்
நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து அவர்களிடமிருந்த10 செல்போன்கள், ரொக்க பணம் ரூ.29,625, மற்றும் 5 இரு சக்கர வாகனங்களை தோகைமலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து சூதாட்டம் நடத்திய ஏஜன்ட் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குபதிந்து, அவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பிறகு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்