கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44 வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் துவக்கி வைத்து, பங்கேற்று பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜுலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறவுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இப்போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லுரி மாணவ, மாணவியர்களுக்கு, நீதிமன்ற வழக்காடிகள் மற்றும் பணியாளர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, அதிநவீன மின்னனு வீடியோ வாகனம் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்பட்டன, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் மாதிரி வரையப்பட்ட கோலங்கள் (ரங்கோலி), செல்பி பாயிண்ட், பேருந்து பின்புறத்தில் சதுரங்க ஒலிம்பியாட் தொடர்பான பதாகைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சதுரங்க ஒலிம்பியாட் தொடர்பாக அச்சிடப்பட்ட மஞ்சப்பை வழங்கப்பட்டது போன்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்கு மேல் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமையில், பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் சர்வதேச ஒலிபியாட் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக சர்வதேச ஒழுமியாட் செஸ் போட்டி குறித்து வண்ணமிகு பொம்மைகள் வைக்கப்பட்டு அதை செஸ் போட்டி குறித்து படங்கள் வரையப்பட்டுள்ளது
அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நானும் கலந்து கொண்டு விளையாடினேன், இதில் வெற்றி பெற்றவர்களை பாரட்டி ஊக்கிவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), தனித்துனை ஆட்சியர் (சபாதி) சைபுதின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.