முகப்பு Uncategorized கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில் மாபெரும் புத்தக திருவிழா...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில் மாபெரும் புத்தக திருவிழா ஆலோசனைக்கூட்டம்.

1
0

கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி மிகப்பெரிய புத்தகத் திருவிழா அரசு விழாவாக வருகின்ற 19 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. குறிப்பாக 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணிவரை நற்சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் சாலமன்பாப்பையா, மதிப்பிற்குரிய திண்டுக்கல் லியோனி , இயக்குநர்.செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , மற்றும் சுகிசிவம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 6.00 மணி முதல் 8:00 மணி வரை இருக்கக்கூடிய நிகழ்வில் பங்கு பெற்று சிறப்பிக்க இருக்கின்றார்கள். மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பஸ் வசதி, குடிநீர் வசதிகள், மற்றும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் . இந்த மாபெரும் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), பொதுபணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சச்சிதானந்தம், மகளிர் திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதபாணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்