தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத கந்த சஷ்டி கவச விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று ஆலய மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வடிவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து திருமண கோலத்தில் ஆலய சன்னதி அருகே சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர்.
தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபோ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆன்மிக ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.