கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் இன்று காலை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்களும் தற்போது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1க்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா சரமாரி கேள்வி. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு, நீதி கேட்டு போராட்டம் நடத்துவதாக அழைப்பு விடுத்திருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி சரமரியாக கேள்வி.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்ற நடுவர் அம்பிகா நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தினமும் மாலையில் காவல் இடத்தில் கையெழுத்து போட வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராட்டத் தூண்டவோ போராட்டத்தில் நடத்தவோ கூடாது என பிரமான பத்திரம் தாக்கல் செய்ய 4 பேருக்கும் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.