வங்க கடலில் ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில், 7 செ.மீ., மழை பதிவானது. சோலையாறு, திருநெல்வேலி, 5; அவலாஞ்சி, 3; மாஞ்சோலை, பந்தலுார், 2; செங்கோட்டை, பொள்ளாச்சி, தேக்கடி, கருப்பா நதி அணை, சுருளக்கோடு, 1 செ.மீ., மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது.

வரும் நாட்களை பொறுத்தவரை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வடமேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய கடலோரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால், ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.