முகப்பு Uncategorized கோவில் பூசாரி ஆட்டுக்குட்டியின் ரத்தம் குடிக்கும் திருவிழா.

கோவில் பூசாரி ஆட்டுக்குட்டியின் ரத்தம் குடிக்கும் திருவிழா.

53
0

கரூர் அடுத்த முனியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் சுவாமி 39ம் ஆண்டு வைகாசி மாத திருவிழா – பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிடா குட்டிகள்- குட்டிக்குடி திருவிழாவில் வீச்சரிவாள் மீது நின்றபடி கோவில் பூசாரி ஆட்டுக்குட்டியின் ரத்தத்தைக் குடித்தார்.

பல்வேறு இடங்களில் நூதன திருவிழாவாக பக்தர்கள் அக்னிச்சட்டி, அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை பக்தர்கள் செய்து வரும் நிலையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நேரு வடபாகம் கிராமம், முனியப்பனூர் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமி ஆலயத்தில் 39 ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழா நேற்று முதல் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பக்தர்கள் கிடா குட்டி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு முனியப்ப ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவர் ஆன முனியப்ப சாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்கள் வழங்கிய வண்ணம் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சி அளித்தார். பக்தர்கள் வரிசையாக நின்று தங்களது நேர்த்திக் கடனாக கிடாக் குட்டியை வழங்கினர்.

பக்தர்கள் வழங்கிய கிடாக் குட்டியை கோவில் பூசாரி வீச்சருவா மீது நின்றபடி கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சியவாறு ஆவேசமாக காட்சியளித்தார். வைகாசி மாத முனியப்பனூர் முனியப்ப சுவாமி திருவிழா நிகழ்ச்சியில் இன்று 200க்கும் மேற்பட்ட கிடா குட்டிகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.

அதைத் தொடர்ந்து பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து முனியப்ப சுவாமியை மனம் உருகி வேண்டி பின்னர் ஆலயத்திலிருந்து சென்றனர் .

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்