முகப்பு Uncategorized கோவையில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் நிகழ்ச்சி!

கோவையில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் நிகழ்ச்சி!

3
0

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நான்கு சக்கர வாகனங்களுக்கான ப்ளூ பேண்ட் FMSCI இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2022 – இரண்டாம் சுற்று கோவையில் தொடங்கியது.

இந்த பந்தய நிகழ்ச்சி ஜூலை 31 வரை நடைபெறும். இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 கார்கள் இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளன. இந்த ராலி, சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் என இரு பிரிவுகளில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

வெற்றி பெறும் வீரர்களுக்கு 6,00,000 ருபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களும் பொது மக்கள், பந்தய பிரியர்கள் இந்நிகழ்ச்சியினை இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம்.அவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து பார்க்க பிரத்தியேக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்