முகப்பு Uncategorized கோவை பெண் ஊழியர் கொலை வழக்கில் தொழில் அதிபர்- குளித்தலை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

கோவை பெண் ஊழியர் கொலை வழக்கில் தொழில் அதிபர்- குளித்தலை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

4
0

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது‌. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் அந்த கடையை நடத்தி வந்துள்ளார்.சம்பவத்தன்று அந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த நவநீதன் மற்றும் அவரது மனைவியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததால் அந்த பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அந்த பெண், கோவை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கணவரை பிரிந்த வாழ்ந்த வந்த தனக்கும், கடை உரிமையாளரான நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பலமுறை தன்னை பலாத்காரம் செய்தார். இதனால் தான் கர்ப்பம் அடைந்தேன். இதனை அறிந்த நவநீதன், கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். இதையடுத்து நான் அந்த கர்ப்பத்தை கலைத்தேன்.

இது அவரது மனைவிக்கும் தெரியும். அடிக்கடி கர்ப்பம் கலைத்ததால் தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே தனது மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர்கள் எனக்கு பணம் தர மறுத்ததுடன், குளியல் அறைக்கு அழைத்து சென்று தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தனர் என்று அந்த பெண் கூறியுள்ளார்.மேலும் இதுதொடர்பான வீடியோ, கடிதம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு அந்தப் பெண் இறந்ததைத் தொடர்ந்து போலீசார் இதை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

மேலும் தொழில் அதிபர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நவநீதன் கரூர் மாவட்டம், குளித்தலை குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தார்.அப்போது அவர் தனது தலை முழுவதும் துண்டால் மறைத்தவாறு வக்கீல்களுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். இதையடுத்து நீதிபதி தினேஷ்குமார், தொழில் அதிபர் நவநீதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் குளித்தலை போலீசார் மூலம் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்