முகப்பு சமையல் சோயா பிரியாணி

சோயா பிரியாணி

0
0

தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி – 2 கப்,
சோயா – 15 முதல் 20 (ஊற வைத்துக் கொள்ளவும்),
வெங்காயம் – 2,
தக்காளி – 3,
முந்திரி – 10,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி, பூண்டு – 2 டீஸ்பூன் (இடித்து வைத்துக்கொள்ளவும்),
கொத்தமல்லி, புதினா – 1 கப்,
தயிர் –  1/2 கப்,
பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்,
நெய், எண்ணெய் – 1 கப்,
உப்பு – தேவைக்கு.

 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் முந்திரியை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியவுடன் தக்காளி, உப்பு, கொத்தமல்லி, புதினா, தயிர், பிரியாணி மசாலா சேர்த்து வேக வைக்கவும். பின் சோயாவை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கினால் சோயா பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சோயா சில்லி சேர்த்து பரிமாறவும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்