நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்துக்கு நிகராக தக்காளிக்கு மவுசு கூடி உள்ளது. இந்த நிலையில், தக்காளியை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.