முகப்பு Uncategorized தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!

1
0

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காய்கறி விலை, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் மொம்மை முதல்வரின் அசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

பொம்மை முதல்வரின் பொய்யான தேர்தல் வாக்குறுதியால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மின்சார உயர்வு காரணமாக இன்று அனைத்து விலைவாசியும் தமிழகத்தில் உயர்ந்துள்ளது. தொழில் நகரங்களில் மின்சாரம் உயர்ந்தால் தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலை உருவாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் திமுக ஆட்சியில் கஞ்சி தொட்டி தொடங்கும் நிலை ஏற்படும் என்ற அவர், தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான காய்கறி விலை, மளிகை பொருட்கள் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளது.

செந்தில்பாலாஜி துர்கா ஸ்டாலின் தயவில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். தமிழகத்தில் டாஸ்மாக் துறையில் உள்ள 5500 மதுகடையில் 4000 கடைகளில் ஏலம் விடாமலே பார் நடத்தி கொள்ளை அடித்துள்ளார். கம்பெனியில் இருந்து 50 சதவீதம் சரக்கு பில் இல்லாமல் கடை மற்றும் பார்களில் விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த பணத்தை ஸ்டாலின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி. திமுக, கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜிக்கு ஏன் வக்காலத்து வாங்குகின்றனர் என்பது மர்மமாக உள்ளது.

செந்தில் பாலாஜி தப்பு செய்யாதவர் என்றால் ஏன் விசாரணைக்கு செல்ல பயப்படுகிறார்? இவருக்கு ஸ்டாலின் குடும்பம் துணை நிற்கிறது. இதில் உள்ள மர்மம் என்ன என்பது தெரியவில்லை.? தமிழகம் முழுதும் ஒரு அரசாங்கம் நடந்தால், கரூரில் மட்டும் தனி அரசாங்கம் நடந்து வருகிறது. சாராயத்தில் எப்படி ஊழல் செய்யலாம் என திட்டமிட்டு கொடுத்தவர் செந்தில்பாலாஜி. மறை கழண்டு போய்விட்டது. அமைச்சர் முத்துசாமிக்கு காலை 7 மணிக்கு குடித்தால் அவன் குடிகாரன் இல்லை என்கிறார். திமுகவிற்கு சென்றதும் அவருக்கும் மறை கழண்டுவிட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்