முகப்பு Uncategorized தமிழக அரசின் திடீர் வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல்.

தமிழக அரசின் திடீர் வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல்.

3
0

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.


இதனை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

“சட்டசபை தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்