முகப்பு Uncategorized தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு-பா ஜ க தலைவர்...

தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு-பா ஜ க தலைவர் அண்ணாமலை அறிக்கை.

7
0

தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்றால் தொழில்கள் நலிவுற்றும் வருமானம் குறைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் குடியிருப்பு சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.

மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் அமைச்சர் நேரு இந்த தடாலடி சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துஉள்ளார். அதில் உண்மைக்கு புறம்பாக ‘மத்திய அரசு சொல்லிதான் நாங்கள் வரியை உயர்த்தினோம்’ என்று பொய்யாக குறிப்பிடுகிறார்.

எந்த இடத்திலும் மத்திய அரசின் ஆணையில் சொத்து வரியை உயர்த்தச் சொல்லவே இல்லை.தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்