முகப்பு Uncategorized தமிழ்நாடு சட்டப்பேரவையில் செல்லூர் ராஜ் கேள்வியால் சிரிப்பு அலை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செல்லூர் ராஜ் கேள்வியால் சிரிப்பு அலை.

8
0

சட்டப்பேரவையில் இன்று மதுரை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜ் கேள்வி-

மதுரையின் மெரினாவாக மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு லேசர் ஷோ நடத்தினால் நன்றாக இருக்கும். அமைச்சர் இளைஞராக இருப்பதால், இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனக்கூறினார்.

சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பதில்-
இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு பரிசீலிக்கும் எனக்கூறினார். தொடர்ந்து செல்லூர் ராஜூ மதுரையில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். பொழுது போக்குவதற்கு எந்த அம்சமும் இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த ஒன்று நகைச்சுவையாக கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்