கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள காகிதபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதனை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா டிஎன்பிஎல் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேப்பர் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் டி ஆர் பி ராஜா பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக அலுவலகத்தில் காகித நிறுவனம் குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.