முகப்பு Uncategorized தமிழ்நாடு, துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி ...

தமிழ்நாடு, துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி மதுரையில் துவக்கம்.

3
0

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுரை ரைபிள் கிளப்பில் 48-வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் சீதாராம ராவ் தலைமை தாங்கினார்.

இதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேஸ்வரன் கலந்து கொண்டு 25 மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடும் போட்டியில் துப்பாக்கியால் சுட்டு போட்டியினை துவக்கி வைத்தார்

துப்பாக்கி சுடுதல் துவங்கிய இந்த போட்டிகள் வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 51 கிளப்புகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு, பிஸ்டல், ரைபிள், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், வயதின் அடிப்படையில் சப் யூத், யூத், ஜூனியர், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடக்கிறது. இதில், தேர்வாகும் வீரர்கள், தேசிய போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்