முகப்பு Uncategorized தருமபுரி மாவட்டம் நதிக்கரையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

தருமபுரி மாவட்டம் நதிக்கரையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

2
0

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலமாகும். அதேபோல, காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி, இருமத்தூர் ஆகியவை தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலங்களாகும்.

இந்த தலங்களிலும் தொப்பையாறு அணை, பஞ்சபள்ளி அணை, நாகாவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் சித்திரை 1, ஆடி 1, ஆடி 18, ஆடி அமாவாசை, காணும் பொங்கல் தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பொதுமக்கள் நீராடவும், சடங்குகள் செய்யவும் திரள்வது வழக்கம்

அந்த வகையில் ஆடி மாத முதல் தேதியான இன்று (ஜூலை 17) தருமபுரி மாவட்ட நதிக்கரை தலங்கள் மற்றும் நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் நீராடவும் வழிபடவும் திரளான மக்கள் வருகை தந்தனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் உயிரிழந்த முன்னோர்களுக்கு நதிக்கரையில் தர்ப்பண சடங்கு செய்திடவும் ஏராளமானவர்கள் நதிக்கரை தலங்களில் திரண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்