முகப்பு Uncategorized திருமண மண்டபம் முன்பதிவு செய்ய விஏஓ சான்றிதழ் பெற வேண்டும்.

திருமண மண்டபம் முன்பதிவு செய்ய விஏஓ சான்றிதழ் பெற வேண்டும்.

27
0

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விஏஓவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
பயிற்சியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது; குழந்தைகள் திருமணம், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக நிமிர்ந்து நில் துணிந்து செல் இயக்கம் மூலம் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் வந்து கொண்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். விஏஓவினர் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக கவனிக்க வேண்டும். குழந்தை திருமணம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.

சிசு மரணங்கள் நடக்க காரணம் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால்தான். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நமது மாவட்டத்தில் 3 ஆயிரம் பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ளனர். இதற்கு காரணம் இளவயது திருமணம் தான்.

விஏஓவினர் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இரும்பு கரம் கொண்டு குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த வேண்டும். சைல்டு லைன் போன் எண் 1098 மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் அனைவரது மீதும் வழக்கு தொடுக்க கூடிய சட்ட உரிமை உள்ளது.

இனிமேல் 18வயது பெண்ணிற்கு நிறைவு பெற்றுள்ளது என்ற விஏஓவினர் சான்று பெற்ற பின்னரே திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்யப்படும் என்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளோம். எனவே சிறப்பாகப் பயிற்சி பெற்று மன நிறைவோடு சமுதாய வளர்ச்சிக்காக பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்