கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் மேற்கு பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்கண்ணன். இவரது 7 வயது மகன் அதீதன். அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். வீட்டிற்கு முன்புறம் தனது நண்பனுடன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு வளர்ப்பு நாயும், ஒரு குட்டி தெரு நாயும் சேர்ந்து சிறுவனை கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுவனை காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடலைநிலை சீரானதை அடுத்து, சிறுவன் தனது தந்தையுடன் சேர்ந்து மாநகராட்சி மேயர், மாநகராசி ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க வந்தான். பள்ளி சீருடை அணிந்தும், முகத்தில் நாய் படம் போட்ட மாஸ்க் அணிந்து வந்திருந்தான். முதலாவதாக மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க முயன்ற போது, நீண்ட காத்திருப்புப் பிறகு சிறுவனின் தந்தையை மட்டும் அனுமதித்து விட்டு, சிறுவனை ஆணையரின் அறைக்குள் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து கீழ் தளத்தில் உள்ள மாநகராட்சி மேயரை சந்தித்து அப்பாவும், மகனும் சென்று மனு அளித்தனர்.
அம்மனுவில் மாணவன் அதீதன், அத்தை நாய்களை தெருவில் வி.டாதீர்கள் நாய்கள் கடிப்பதால் பயமாய் இருக்கிறது என்று கைப்பட எழுதிய மனுவை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.