விழுப்புரம் மாவட்டம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு. பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

இவர், சொந்த ஊர் மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் குடியிருக்கிறார் பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். சென்னை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் டூ பயின்றார்.