டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள். இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறந்து இருக்கும்.

இன்று காலை 7.10 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக கடந்த சனிக்கிழமை பக்தர்கள் யாத்திரை தொடங்கியது.
கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.