முகப்பு இந்தியா பாமர மக்களுடன் செல்பி எடுத்த பெண் அமைச்சர்.

பாமர மக்களுடன் செல்பி எடுத்த பெண் அமைச்சர்.

1
0

100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களை சந்தித்து உரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம் – எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார். அங்கிருந்த பெண்களிடம் ஊதியம் முறையாகவும் குறித்த நேரத்திலும் கொடுக்கப்படுகிறாதா? பணியில் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் கனிமொழி.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்