முகப்பு Uncategorized பூவிற்கு ஆசைப்பட்டு சென்ற மூதாட்டி – சடலமாக மீட்பு நடந்தது என்ன?

பூவிற்கு ஆசைப்பட்டு சென்ற மூதாட்டி – சடலமாக மீட்பு நடந்தது என்ன?

38
0

கரூர் மாவட்டம், புகழூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள பூக்களை பறிப்பதற்காக கிணற்றின் அருகே சென்று பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார் .

பூக்களை பறிக்க போன மஞ்சுளா வெகுநேரமாக வீடு திரும்பாதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மாலை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சென்று பார்த்த போது மஞ்சுளா நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து இருப்பது தெரியவந்தது.

அதன், அடிப்படையில் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மூழ்கி இறந்த மஞ்சுளாவை நீண்ட நேரம் தேடி சடளமாக மீட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்