முகப்பு Uncategorized மகனின் கண் முன்னே தாயின் மரணம்.

மகனின் கண் முன்னே தாயின் மரணம்.

7
0

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சித்திரை சாவடி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்பவரின் மனைவி மாலா 48 இவர் காலை பண்ருட்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக தன் மகன் முரளி என்பவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் வழியாக சென்று கொண்டு இருந்தனர்.

அப்பொழுது, கண்டமங்கலம் ஈஸ்வரன் கோயில் அருகே சென்ற பொழுது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரி இரண்டு சக்கர வாகனத்தில் லேசாக உரசியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த மாலா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார் திடீரென லாரியின் சக்கரம் மாலாவின் தலையில் ஏறியது. இதில், தலை நசுங்கி மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முரளி படுகாயம் அடைந்தார். இது குறித்து, தகவல் அறிந்த கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்