முகப்பு Uncategorized மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 21 சவரன் நகை திருட்டு.

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 21 சவரன் நகை திருட்டு.

13
0

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்கநகைகள் பொருட்களை திருடு போயுள்ளது.

இதனைத்தொடர்ந்து வீட்டின் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ஓட்டுநர் ஜெயராமன் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நாரயணன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ்.காலனி காவல்துறையினர் ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவரிடமிருந்து 21 சவரன் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். உரிமையாளரிடம் இருந்து ஓட்டுநரே நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்