முகப்பு Uncategorized மதுரையில் நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்று பொன்விழா பொதுக் கூட்டம்.

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்று பொன்விழா பொதுக் கூட்டம்.

1
0

கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநாடு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சின்னச்சாமி

மதுரையில் நடைபெறவுள்ள அஇஅதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நிகழ்ச்சிக்காக கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை நோக்கி கழக தொண்டர்கள் தீப சுடர் ஏந்தி கரூர் நோக்கி வந்தது. இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தை கடந்து இன்று வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு தீப சுடர் கரூர் எல்லைக்குள் வந்தது.

கரூர் – மதுரை தேசிய நெடு்ஞ்சாலையில் தவுட்டுபாளையம் காவிரி ஆற்றுபாலம் பகுதியில் துவங்கி சுடர் ஓட்டம் வேலாயுதம் பாளையம் ரவுண்டானா, வழியாக கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக, மண்மங்கலம், செம்மடை, வெங்கமேடு, சர்ச் கார்னர், கரூர் பேரூந்து நிலையம் ரவுண்டா பகுதி வழியாக கோவை சாலையில் சென்று மீண்டும் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டுக்கல் வழியாக சுடர் ஏந்தி ஓட்டம் நடைபெற்றது.

இந்நிகழச்சியில் ஒன்றிய, நகர, பகுதி கழக, பேரூர் கழக, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்