முகப்பு Uncategorized மதுரை, அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

மதுரை, அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

9
0

மதுரை மாநகராட்சி, 2ஆவது மண்டலம் சார்பில் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டமானது மேயர் இந்திராணி , மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த, கூட்டத்திற்று மனு அளிக்க வந்த 20ஆவது வார்டு அதிமுக கவுன்சிலரான நாகஜோதி தலைமையல் அந்த வார்டு சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மேயர் முன்பாக மண்டல அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மேயரை சந்தித்து அதிமுக கவுன்சிலர் நாகஜோதி தனது பகுதியில் சாலை , குடிநீர் வசதி , பாதாள சாக்கடைக்கு தோண்டபட்ட குழிகள் மூடப்படவில்லை என்பது குறித்து முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி 14வது வார்டு அதிமுக உறுப்பினர் மாணிக்கம் தனது வார்டு பகுதியில் மாநகராட்சி குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் நாள்தோறும் வீணாக வெளியேறி வருவதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை விட அதிக அளவில் குடிநீர் வீணாக சாலையில் செல்வதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தார். மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்