முகப்பு Uncategorized மதுரை, மத்திய சிறையில் கணினி மயமாக்கப்பட்ட அங்காடிகள்.

மதுரை, மத்திய சிறையில் கணினி மயமாக்கப்பட்ட அங்காடிகள்.

3
0

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறை மேலாண்மை திட்டத்தின் மூலம் மத்திய சிறைகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனை சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள கட்டளை கண்காணிப்பு மையத்திலிருந்து (Command Control Center) கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறைவாசிகள் அங்காடிகள் (PCP Canteen) முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டு (Bio-matric) அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை, முதல்முறையாக கடந்த ஜூலை 03 ஆம் தேதி அன்று புழல் மத்தியசிறையில் சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஜ் புஜாரி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், சிறைவாசிகள் தங்களுக்குத் தேவையான அத்திவாசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை (Prisoner Cash Property Canteen) PCP- Canteen மூலமாக தங்களது விரல்ரேகையினை பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் சிறைவாசிகளின் சொந்த பணக்கணக்கு விபரங்கள் அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டு சிறைவாசிகள் தங்களது கணக்கு விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்