இந்த பகுதியில், கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பணிகள் மற்றும் மேம்பால பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டது.

சாலைக்கு பதிலாக தெருக்கள் முழுவதிலும் சேறும் சகதியுமாக இருப்பதால் தெருக்களில் முதியவர்கள், குழந்தைகள் நடந்துசெல்லும் போது தவறி விழுந்து தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதாகவும் கூறியும், தொடர்ந்து குடிநீரில் கழிவுநீரும் , புழுக்களும் கலந்துவருவதாகவும் கூறி தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர்.

ஆனால், மாநகராட்சி உரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் மாநாகராட்சியின் அலட்சியபோக்கை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தரகோரியும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.