கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, சற்று அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,039 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரம் படி வினாடிக்கு, 9,459 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 8,339 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 676 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவு வினாடிக்கு, 433 கனஅடியாக இருந்தது.
கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 374 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 88.46 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.43 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.