முகப்பு Uncategorized மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து 52 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து 52 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

2
0

காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  30 ஆயிரத்து, 978 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 52 ஆயிரத்து, 634 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 51 ஆயிரத்து, 444 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 420 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 522 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 77.17 அடியாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்