மாயனூர் காவிரி கதவணை அருகே 10 அடி நீள கோதுமை நாகம் மீன், வளையல் சிக்கி படம் எடுத்து வருகிறது. மீனவர்கள், பொதுமக்கள் அச்சம்.
கதவணை அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் மீனவர்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படாத வலைகள் அருகே கிடந்துள்ளது. நீரில் அடித்து வரப்பட்டதாக கூறும் 10 அடி அரிய வகை நாகப்பாம்பு அந்த வலையில் மாட்டிக் கொண்டு சிக்கி உள்ளது.
இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள், ரம்பர் படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக வைக்க செல்லும் போது, பாம்பை பார்த்து அச்சமடைந்துள்ளனர்.
இதை அறிந்த பொதுமக்கள், மீனவர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். புதுவகை நல்ல பாம்பு என்பதால் பொதுமக்கள் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு, பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.