சென்னையை அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக,

தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகள் தாரை வார்க்கப்பட்டால், அதை தமிழகம் இதுவரை காணாத வகையில் வன்னியர்கள் போராடுவார்கள்; அதற்கு, தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது, தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் எழுதியுள்ளார்.