முகப்பு Uncategorized முத்து மாரியம்மனுக்கு 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவீதி உலா

முத்து மாரியம்மனுக்கு 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவீதி உலா

7
0

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான இன்று வெள்ளிக்கிழமை மாலை முத்துமாரி அம்மனுக்கு முப்பத்தி 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூத்தட்டு ரத வாகனத்தில் கொழுவிருக்க செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

32 ஆண்டு பூச்சொரிதல் விழாவில் 30 கிலோ செவந்தி மலர்கள் மற்றும் வண்ண நூல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ முத்து மாரியம்மன் பூச்சொரிதல் விழா வலம் வந்த நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே காத்திருந்து தேங்காய், பழம், மஞ்சள் நீருடன் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பூச்செரிதல் திருவீதி உலா மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்த ஸ்ரீ முத்துமாரி அம்மன் உற்சவர் ஸ்வாமிக்கு தூப தீபங்கள் கட்டப்பட்டு, கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்