கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானைக்கு சிகிக்சையளிக்க யானையின் இருப்பிடத்தை பைரவன், வளவன் என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி யானையை கண்டுயறிந்து அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, பாகுபலி யானையை பிடிப்பதற்கு முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம் மற்றும் விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் நள்ளிரவு மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி, பெரிய காயமாக இருந்தால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
யானையை, கண்டவுடன் அதனை, சமநிலை பகுதிக்கு வரவழைத்து அதற்கு பின் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து, கால்நடை மருத்துவர் சுகுமார் யானை பாகுபலிக்கு வாயில் காயம் ஏற்பட்டது நாட்டு வெடியை கடித்தது தான் காரணம் என கூறுவது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்
யானையை இரண்டு நாட்களாக கன்கானித்த நிலையில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தான் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.யானையை தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின் பேரில் யானையை பிடித்து மருத்துவ சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்