முகப்பு Uncategorized யமாஹா ஆர்எக்ஸ்100 ரிட்டர்ன்ஸ்….90-ஸ் கிட்ஸ் குஷி

யமாஹா ஆர்எக்ஸ்100 ரிட்டர்ன்ஸ்….90-ஸ் கிட்ஸ் குஷி

58
0

யமாஹா நிறுவனம் மீண்டும் புகழ்பெற்ற ஆர்எக்ஸ்100 (Yamaha Rx 100)பைக்கை களமிறக்க திட்டமிட்டுள்ளது. காலம் மாறமாற என்னதான் பைக்குகளில் புது புது அறிமுகங்கள் வந்தாலும் 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பைக்கான யமாஹா ஆர்எக்ஸ்100 பைக் மீதான மோகம் இளைஞர்களுக்கு இன்றும் குறையவில்லை. அவர்களை மேலும், குஷி படுத்தும் விதமாகவே யமஹா நிறுவனம் மீண்டும் ஆர்எக்ஸ்100 பைக்கை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை முதன் முதலாக 1985ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த ஆர்எக்ஸ்100 பைக் பல்வேறு காரணங்களால் மோட்டார் சைக்கிள் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது. 26 ஆண்டுகள் ஓடியது, இருந்தும் ஆர்எக்ஸ் 100 பைக்கிற்குக் தற்போதும் நல்ல டிமாண்ட் இருக்கிறது.

2 ஸ்ட்ரோக் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் யமாஹா, சுசுக்கி, உள்ளிட்ட நிறுவனங்களில் வெளிவந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இதனால், யமஹா ஆர்எக்ஸ்100 பிரியர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

அந்த கவலையை போக்கும் விதமாக, யமஹா நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. ஆனால், தற்போது வெளிவரவிருக்கும் ஆர்எக்ஸ்100 பைக் 2 ஸ்ட்ரோக் வாகனமாக அல்லாமல், பிஎஸ் 6 தரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், 2 ஸ்ட்ரோக் பைக்கில் இருக்கும் அதே திறன், வேகம் மற்றும் அந்த பைக்கிற்கென இருக்கும் தனித்துவமான சத்தம் இந்த புதிய ஆர்எக்ஸ்100 பைக்கில் இருக்குமா என்பது சந்தேகமே…

ஏனென்றால் அந்த சத்ததிற்காவே இளைஞர்கள் அந்த பைக் மீது அதீத பிரியம் கொண்டுள்ளனர். எது எப்படியோ… ஆனால் ஆர்எக்ஸ்100 பிரியர்களுக்கு இந்த செய்தி சின்ன மனநிறைவை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2026ம் ஆண்டிற்குள் புதிய அவதாரத்துடன் ஆர்எக்ஸ்100 வெளிவரலாம் என யமஹா நிறுவனத்தின் சேர்மேன் ஐஷின் சிஹானா பேட்டி அளித்துள்ளார். அதுபோக, 2025 ஆண்டிற்குள் யமஹா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்