முகப்பு அன்மை செய்திகள் யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.

யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.

8
0

முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில் மசினி என்ற யானை அதனுடைய பாகன் பாலனை தாக்கிக் கொன்றது. யானைகள் முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கஜேந்திரன் என்ற யானை பாகனை கடந்த 2018 ஆம் ஆண்டு மசினி யானை அடித்து கொன்றது. இதனைத் தொடர்ந்து, எம். ஆர். புரம் யானைகள் முகாமில் மசினி யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மசினி யானை கொண்டு வரப்பட்டது. இதனை பாலன் என்ற யானைப்பாகன் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அபயாரண்யம் யானையின் முகாமில் மசினி யானைக்கு உணவளிக்க சென்ற பாகன் பாலனை யானை கடுமையாக தாக்கியது. இதில் அவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்