முகப்பு Uncategorized ரகசிய காதலை உடைத்து கலாட்டா கல்யாணம் செய்த நடிகர் கவின்.

ரகசிய காதலை உடைத்து கலாட்டா கல்யாணம் செய்த நடிகர் கவின்.

1
0

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கவின். அவருக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்நிலையில் தான் கவினும், மோனிகா டேவிட் என்பவரும் பல ஆண்டுகளாக காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆகஸ்ட் 20ம் தேதி மோனிகாவை மணக்கிறார் கவின் என செய்திகள் வெளியாகின. அதே போன்று கவின், மோனிகாவின் திருமணம் நடந்தது.

கவின், மோனிகாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகத் துவங்கியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், கவின் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.


கவினின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தி வருகிறார்கள். காதலியே மனைவியான சந்தோஷத்தில் கவின் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்