முகப்பு Uncategorized வாட்ஸ் ஆப்பில் வரும் இணைப்பை தொட வேண்டாம், சைபர் கிரைம் அறிவிப்பு.

வாட்ஸ் ஆப்பில் வரும் இணைப்பை தொட வேண்டாம், சைபர் கிரைம் அறிவிப்பு.

1
0

‘மின்கட்டணம் செலுத்தாவிட்டால், இணைப்பு துண்டிக்கப்படும் என்று, ‘வாட்ஸ் ஆப்’பில் வரும் இணைப்புகளை தொட வேண்டாம்’ என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் ‘சைபர் கிரைம்’ குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், புதிது புதிதாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவதால் அவற்றை தடுப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.

தற்போது, வாட்ஸ் ஆப்பில் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற, ‘லிங்க்’ ஒன்றை சைபர் கிரைம் குற்றவாளிகள் வேகமாக பரவ செய்து வருகின்றனர்.

இதுபோன்று, போலியாக வாட்ஸ் ஆப்பில் வரும் இணைப்புகளை யாரும், ‘கிளிக்’ செய்யவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்