முகப்பு Uncategorized வீட்டு கடன் வங்கியில் கடன் பெற்ற தந்தை உயிரிழந்த நிலையில், தகவல் தெரிவிக்காமல் கடன் பட்டியலில்...

வீட்டு கடன் வங்கியில் கடன் பெற்ற தந்தை உயிரிழந்த நிலையில், தகவல் தெரிவிக்காமல் கடன் பட்டியலில் மனைவி, மகன் பெயரை சேர்த்த வங்கி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.

2
0

கரூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கரூர் ரெப்கோ வங்கியில் கடந்த 2010ம் ஆணடு ரூ.20 லட்சம் வீட்டு கடன் பெற்றிருந்தார். மேற்படி கடனுக்கு மாதா மாதம் தவணை தொகை செலுத்தி வந்த நிலையில் கடந்த 2011, மே 8ம் தேதி பழனிச்சாமி உயிரிழந்தார். பழனிச்சாமி கடன் பெற்றப்போது, கடன் தொகை செலுத்தி வரும்போது ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் அந்த தொகையை காப்பீடு நிறுவனம் மூலம் ஈடு செய்யும் வகையில் கடன் தொகைக்கு காப்பீடும் எடுத்து ப்ரீமியம் செலுத்தி வந்துள்ளார்.

பழனிச்சாமியின் மனைவி லட்சுமி, மகன் சதீஷ்குமார் ஆகியோருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல், வங்கி தரப்பு இருவரையும் தங்கள் கடன்தாரர்களாக அறிவிப்பு செய்தது. இ துகுறித்து தகவல் அறிந்த சதீஷ்குமார் வங்கியை தொடர்புக் கொண்டுள்ளார். கடன் தொகை பற்றி தெரிவிக்காமல், கடனை திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலான சிபிலில் அவர்களை சேர்த்துவிட்டது.

வங்கி நடவடிக்கையால் சதீஷ்குமாருக்கு மன உளைச்சல், அவமானம் ஏற்பட்டதால், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017ம் ஆண்டு டிச.14ல், ரூ.9.10 லட்சம் நஷ்ட ஈடு, செலவுத்தொகை ஆகியவை கோரி புகார் அளித்தார்.

இதனை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அளித்த உத்தரவில், காப்பீடு குறித்த விபரம் தெரிவிக்காத காரணத்திற்காக ரூ.1 லட்சம், சிபிலில் சதீஷ்குமார், அவரது தாய் லட்சுமி பெயரை தவறாக சேர்த்ததற்காக ரூ.3 லட்சம் என சேவை குறைப்பாட்டிற்காக மொத்தம் ரூ.4 லட்சம் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும். செலவுத்தொகையாக ரூ.7,000 வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்