முகப்பு Uncategorized வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் தரும் கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்

வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் தரும் கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்

34
0

கரூரில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றிருந்து கம்பம் எடுத்து சென்று நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. தற்பொழுது தமிழக அரசு விதிமுறைகளை அகற்றியதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் வழங்கும் விழா காலை நடைபெற்றது.

கரூர் அருகே அமைந்துள்ள பாலமாபுரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு கம்பத்திற்கு பூஜைகள் செய்து ஐந்து ரோடு, கருப்பாய் கோவில் தெரு, ஜவகர் பஜார் வழியாக பாரம்பரிய அப்பகுதி மக்களால் தோளில் சுமந்து எடுத்து வரப்பட்ட கம்பம் மாரியம்மன் கோவில் சென்றடைந்தது.

தொடர்ந்து இன்று மாலை கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் செய்து திரளான பக்தர்கள் வெள்ளத்தில் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் மேயர் கவிதா கணேசன், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு தீர்த்தம், பால்குடம் எடுத்துச் சென்று வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்