தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது அதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது.

பின்னர் புரட்டாசி மாத தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மனக்கோளத்தில் தேரில் ஒலிபெருக்க செய்தனர் அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கல்யாண வெங்கட்ரமண சுவாமியின் திரு தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை இழுத்த நிலையில் தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது .இந்நிகழ்ச்சியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக புரட்டாசி மாதம் தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற புரட்டாசி மாத தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.