வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி நீள்வட்டபாதையில் கோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை ஏராளமான கலவைகள் சுற்றி வருகின்றன. அவற்றை நாம் சில நேரங்களில் வெறும் கண்களால் பார்க்கும் அளவிற்கு பூமிக்கு அருகே வருவதுண்டு. அப்படி ஒரு வால் நட்சத்திரத்தை நாம் சில நாட்களில் வெறும் கண்களால் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால்நட்சத்திரம் ஒன்று மிகவும் பிரகாசமாக பூமிக்கு அருகே வந்து செல்ல உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
50 ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என்றும் இந்த வால்நட்சத்திரம் தற்போதைய கணிப்பின்படி வரும் பிப்ரவரி 1-ந் தேதி பூமிக்கு அருகில் வரும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் “சி/2022 இ3 (இசட்டிஎப்)” என்ற வால் நட் சத்திரம் சுற்றி வருகிறது. இந்த வால்நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு மார்ச்2-ந் தேதி கண்டுபிடித்தனர். அதிநவீன கேமரா மூலம் இந்த வால்நட்சத்திரம் கண்டு முதலில் இதுசிறுகோள் என கணிக்கப்பட்டது. ஆனால் தொடர் ஆய்வின் மூலம் இது வால்நட்சத்திரம் என உறுதி செய்தது நாசா. தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என நாசா கணித்துள்ளது.