முகப்பு சமையல் சிக்கன் செட்டிநாடு

சிக்கன் செட்டிநாடு

3
0

தேவையான பொருட்கள்

சிக்கன் – 250 கிராம்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
பச்சை மிளகாய் – 3,
கரம் மசாலா – 10 கிராம்,
தேங்காய் விழுது – 20 கிராம்,
எண்ணெய் – 100 மி.லி.கிராம்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 5 கிராம்,
மிளகாய் தூள் – 10 கிராம்.

 

செய்முறை

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்